நீலகிரி மாவட்டம் உதகை,கோத்தகிரி, குந்தா, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாமல் சாரல் மழையும் இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
நீலகிரியில் தொடர் மழை: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை - ஊட்டி சுற்றுலா பயணிகளுக்கு தடை
உதகை: தொடர் கனமழை கரணமாக லாம்சிராக், டால்பின் நோஸ் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
tourist
இதனால் பல இடங்களில் மண்சரிவும் மரங்கள் முறிந்தும் பாறைகள் உருண்டு சாலையிலும் விழுந்துள்ளது. இதன்காரணமாக நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
இதனையடுத்து குன்னூரில் முக்கிய சுற்றுலாத் தலமான லாம்சிராக், டால்பின் நோஸ் போன்ற பகுதிகளில் அதிகளவிலான மழையினால் பாறைகள் உருண்டுள்ளதால் தற்காலிகமாக சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.