நீலகிரி மாவட்டம் குன்னூரில் பருவமழையின்போதும் அவ்வப்போது ஏற்படும் புயல்மழை காரணமாக மரங்கள் சரிவதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. சமீபத்தில், உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட சின்னாலக்கோம்பை ஆதிவாசி கிராமத்தில் பெய்த மழையில் இடிமின்னல் தாக்கி 11 பேர் காயமடைந்தபோது, 17 மணி நேரத்திற்கு பின்னரே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சியில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
குன்னூரில் பேரிடர் மீட்பு குழு அமைப்பு! - Nilgris
நீலகிரி: குன்னூரில் ஆதிவாசி கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பேரிடர் காலங்களில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

குன்னார்
நீலகிரி
வருவாய்துறையினர் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள குழுவில், பேரிடர் காலங்களில் மீட்பதற்கான உபகரணங்கள் கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இதுதொடர்பாக பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.