தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடியுடன்கூடிய ஆலங்கட்டி மழை! குஷியான சுற்றுலாப் பயணிகள் - conoor

நீலகிரி: குன்னூர் அருகே அருவங்காடு சுற்றுப்புறப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்களும், அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

குன்னூரில் ஆலங்கட்டி மழை

By

Published : Apr 30, 2019, 8:13 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில், குன்னூர் அருகே அருவங்காடு, ஜெகதளா உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏப்ரல் 29ஆம் தேதி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்த ஆலங்கட்டி மழை

தொடர்ந்து, இடியுடன் கூடிய, ஆலங்கட்டி மழையும் பெய்ததால் சுற்றுலாப் பயணிகளும், மக்களும் உற்சாகமடைந்து அவற்றை எடுத்து ஆர்வத்துடன் ரசித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details