தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழக்காட்சியில் பயன்படுத்தப்பட்ட பழங்களை மீண்டும் பயன்படுத்த முடிவு ! - friuts show

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்காட்சியில் வடிவமைப்புக்கு பயன்படுத்திய பழங்கள், ஜாம், ஜெல்லி போன்றவற்றை தயாரிப்பதற்காக பழவியல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பழக்கண்காட்சியில் பயன்படுத்த பட்ட பழங்களை முதன் முறையாக மீண்டும் பயன்படுத்த முடிவு !

By

Published : May 28, 2019, 12:46 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61ஆவது பழக்காட்சி நடைபெற்றது. இதில், தோட்டக்கலைத் துறையின் சார்பில், பழ வண்டி, பழ மேடை, மயில், பட்டாம்பூச்சி போன்றவை பழங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி தோட்டக் கலைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், வாழைப்பழங்கள், மாம்பழங்கள், நீலகிரியின் பேரி, பிளம்ஸ் உள்ளிட்ட 1.5 டன் அளவிற்கு ஏராளமான பழங்கள் இடம்பெற்றிருந்தன.

பழக்கண்காட்சியில் பயன்படுத்த பட்ட பழங்களை முதன் முறையாக மீண்டும் பயன்படுத்த முடிவு

இதற்கு முன்புவரை , கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட பழங்கள் அழிக்கப்பட்டு வந்த நிலையில் , இந்த ஆண்டு முதன்முறையாக இவற்றை மீண்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனால், பழங்களை இரண்டு நாட்கள் மட்டும் காட்சிப்படுத்தி உடனடியாக பழவியல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். இந்த பழங்களில் ஜெல்லி, ஜாம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்க தோட்டக் கலைத்துறை முடிவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details