நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கு பணிபுரிய அனுப்பப்படுகின்றனர். இம்முகாமில், 46 வாரங்கள் பயிற்சிபெற்ற 274 பேர், ராணுவ வீரர்களாக பணிபுரிய சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி வெலிங்டன் பேரக்சில் நடைபெற்றது.
பகவத் கீதை, பைபிள், குரான் புத்தகங்கள், தேசியக்கொடி மீதும் ராணுவ வீரர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மேலும் வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பும் நடைபெற்றது.