கோவை, மதுரை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களைச் சேர்ந்த சாரண சாரணிய ஆசிரியர்கள் 142 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான வழிமுறைகள், அவர்கள் சமுதாயத்தில் நல்லொழுக்கங்களுடன் வாழக் கற்பிக்க வேண்டிய பயிற்சிகள், விபத்து காலங்களில் முதலுதவி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இயற்கையைப் பாதுகாப்பதை வலியுறுத்தி மலையேற்ற பயிற்சி, மலை வழி நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குன்னுாரில் சாரணர் சாரணியர் இயக்க பயிற்சி முகாம் தொடங்கியது - சாரணியர் இயக்க பயிற்சி
நீலகிரி: குன்னுாரில் அமைந்துள்ள சாரணர் சாரணியர் பயிற்சி மையத்தில், மாநில அளவிலான சாரணர் சாரணிய ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது

குன்னுாரில் சாரணர் சாரணியர் இயக்க பயிற்சி முகாம் தொடங்கியது
குன்னுாரில் சாரணர் சாரணியர் இயக்க பயிற்சி முகாம் தொடங்கியது
வனவிலங்குகள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டும் வருகின்றன. மேலும், பாம்பு நடனம், முதலுதவி கட்டுதல், குருளையர் வரவேற்பு, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. குருளையர் பயிற்சியைத் தொடர்ந்து, சாரணர் பயிற்சி, திரி சாரணயர் பயிற்சி தலா 7 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.