நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாக சாரல் மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஹெட் லைட், மிஸ்ட் லைட் போன்றவற்றை பயன்படுத்தியே வாகனங்களை இயக்கி வருகின்றனர் .
குன்னூரில் மேகமூட்டம் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் - HEAVY MIST
நீலகிரி: குன்னூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், பெரும்பாலான இடங்களை சரிவர பார்க்க முடியவில்லை என்று சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
![குன்னூரில் மேகமூட்டம் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3861883-thumbnail-3x2-coonoor.jpg)
சுற்றுலாப்பயணி
மேகமூட்டத்துடன் காணப்படும் குன்னூர்
இந்நிலையில் மேகமூட்டம் காரணமாக சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட இடங்களை சரிவர பார்க்க முடியவில்லை சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்தனர். இருந்தபோதும், இதமான காலநிலையை அனுபவிப்பது தங்களுக்கு புதுமையாக உள்ளது எனவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.