நீலகிரி மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று, கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதாலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறைந்து வருவதாலும் மீண்டும் கரோனா அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “நீலகிரியில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தற்போது குறைந்து வருகிறது. அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வந்தால் கட்டுப்படுத்த முடியாது.