நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் ஆண்டுதோரும் தென்மேற்கு பருமழை தீவிரமாக இருக்கும். ஆனால் இந்தாண்டிற்கான பருவமழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கூடலூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக கூடலூர் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை! - heavy rain
உதகை: கூடலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பந்தலூர், தேவாலா தாலூக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக கூடலூர் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை!
குறிப்பாக பந்தலூர் மற்றும் தேவாலா பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கூடலூர் பகுதியில் உள்ள பந்தலூர் மற்றும் தேவாலா தாலூக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தேவாலாவில் 60மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடதக்கது.