தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கருத்துக் கணிப்புக்கள் மாறும்' ஆ.ராசா தடாலடி! - திமுக

நீலகிரி: நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புக்கள் நிச்சயம் மாறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

ஆ.ராசா

By

Published : Mar 21, 2019, 6:13 PM IST


நீலகிரி நாடாளுமன்ற திமுக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுகிறார். உதகைக்கு வந்த அவருக்கு சேரிங்கிராஸ் பகுதியில் கட்சி நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் 'பெரம்பலூர் தனது பிறந்த வீடு, நீலகிரி புகுந்த வீடு. தான் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த போதும் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தொகுதி மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது, கருத்து கணிப்புகள் மாறும். திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமராக ஆக்குவோம் என்று கூறிய வாய்சொல் பலிக்கும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details