நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மார்தோமா நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதுவரை சுமார் 10-க்கும் மேற்பட்ட விலங்குகளை அந்த சிறுத்தை வேட்டையாடி உள்ளது.
தொடரும் சிறுத்தையின் அட்டகாசம் மக்கள் பீதி! - cows
ஊட்டி: குடியிருப்புப் பகுதியில் புகுந்து கால்நடைகள் வேட்டையாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
![தொடரும் சிறுத்தையின் அட்டகாசம் மக்கள் பீதி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3741500-thumbnail-3x2-ooty.jpg)
சிறுத்தையின் அட்டகாசம்
சிறுத்தையின் தாக்குதலில் பலியான ஆடு
இதனால் பீதியடைந்த கிராம மக்கள் கிராமத்திற்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
Last Updated : Jul 4, 2019, 1:25 PM IST