நீலகரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தொரப்பள்ளி பகுதியில் சில வாரங்களாக யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருவதும், மனிதர்களை தாக்குவது போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் விவசாயிகள் பால் கொள்முதல் செய்வதற்காக ஜீப் வாகனம் மூலம் அப்பகுதிக்குச் சென்று திரும்பும் போது எதிரே வந்த யானை வாகனத்தை தாக்கியுள்ளது.
திறம்பட செயல்பட்ட ஓட்டுநரும், அருகில் இருந்தவரும் வாகனத்தில் இருந்து கிழே விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
யானை தாக்கியதில் வாகனம் கவிழ்ந்து அதில் இருந்து 500 லிட்டர் பால் சாலையில் ஆறாக ஒடியது.
யானை தந்தம் குத்தி வாகனம் கவிழ்த்த சம்பவம்; இரண்டு பேர் படுகாயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வனத்துறையினர் இந்த யானைகளை கட்டுபடுத்தாமல் மெத்தனம் காட்டுவதாகவும், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முறையாக அகழிகள் வெட்டவில்லை என கூறி அப்பகுதி மக்கள் கூடலூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வருவாய் கோட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.