தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய அளவிலான ஓட்டப்பந்தயம்: சாதிக்கத் துடிக்கும் தடகள வீரருக்கு அரசு உதவுமா?

அகில இந்திய தொலை தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க உள்ள நீலகிரியை சேர்ந்த தடகள வீரர் பிரபாகரனுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்யவேண்டும் என கோரிக்கை அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 21, 2022, 7:13 PM IST

தேசிய அளவிலான ஓட்டப்பந்தயம்: சாதிக்கத் துடிக்கும் தடகள வீரருக்கு அரசு உதவுமா?

நீலகிரி:இந்திய தொலை தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற தமிழக வீரர் வறுமையின் காரணமாக தைலத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அகில இந்திய தொலை தூர ஓட்டப்பந்தயம், மாநிலம், மாவட்ட அளவிலான நீண்ட தூர ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றெடுத்துள்ளார், பெங்கால்மட்டம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் 13 வயதிலிருந்து 1992ஆம் ஆண்டு நீண்ட தூர தடகள ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வருகிறார்.

300-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்ற இவர் 200-க்கும் மேற்பட்ட பதக்கங்களும் 50-க்கும் மேற்பட்ட கோப்பைகளையும் வென்றுள்ளார். உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் வறுமை காரணமாக பங்கேற்க முடியாமல் உள்ளார். கடந்த முறை இவருக்கு மலேசியாவில் நடைபெற்ற மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் இன்று (டிச.21) அளித்த பிரத்யேக பேட்டியில், 'அரசு உரிய உதவி செய்தால் உலக அளவில் நடைபெற உள்ள 'மூத்தோர் தடகள போட்டி'யில் பங்கேற்று இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்' என்று உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: மெடிக்கல் ஸ்டுடன்ட் டூ மிஸ் சவுத் இந்தியா - மகுடம் சூடிய நாகர்கோவில் பெண்

ABOUT THE AUTHOR

...view details