தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு வழக்கு விசாரணை முக்கிய கட்டம்.. தனபால், ரமேஷுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு - கோடநாடு எஸ்டேட் வழக்கு

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை முக்கியமான கட்டத்தில் இருப்பதால் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கோடநாடு வழக்கு
கோடநாடு வழக்கு

By

Published : Nov 26, 2021, 7:58 PM IST

நீலகிரி:கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை இன்று (நவ.26) உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன் விசாரணைக்கு வந்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அரசு மற்றும் காவல்துறையினர் தரப்பில் நீதிபதியிடம் விசாரணைக்காக கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கினை டிசம்பா் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார்.

புலன் விசாரணை முக்கிய கட்டம்

பின்னா் அரசு தரப்பு வழக்கறிஞா் ஷாஜகான் செய்தியாளா்களிடம் பேசுகையில், " இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனபால், மற்றும் ரமேஷ் ஆகியோாின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் புலன் விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாலும், தற்போது அவர்களை ஜாமீனில் விடுவித்தால் விசாரணையை பொிதும் பாதிக்கும் என நீதிபதியிடம் எடுத்துரைத்தோம்.

கோடநாடு வழக்கு விசாரணை முக்கிய கட்டம்.. தனபால், ரமேஷுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு

கனகராஜின் ஆதாரங்களையும், சாட்சிகளையும் கனகராஜ் உயிரிழந்த பிறகு தனபால் அதனை அழித்துள்ளார். இவா்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவாா்கள் எனவும், இருவருக்கும் ஜாமீன் வழங்க கூடாது" என வாதிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 81 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சர்வதேச பயணிகள் விமான சேவை டிசம்பர் 15 முதல் தொடக்கம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details