தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயோமெட்ரிக் முறையை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது - தமிழ்நாடு உணவு ஆணைய தலைவர் - Nilgiris

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துமாறு ஒன்றிய அரசு கட்டாயபடுத்துவதாக தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் வாசுகி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் வாசுகி
தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் வாசுகி

By

Published : Jul 7, 2021, 7:32 AM IST

நீலகிரி: உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரேஷன் பொருள்கள் இருப்பு குறித்த ஆய்வு கூட்டம் நேற்று (ஜூலை 6) நடைபெற்றது. தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் வாசுகி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதில் நீலகிரி மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளபட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய தலைவர் வாசுகி, "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துமாறு ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது.

கூடுதல் மண்ணெண்ணை

ஆனால் அந்த முறையை பின்பற்றும் போது கால தாமதம், சிக்னல் கோளாறு ஏற்படுகிறது. கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பயோமெட்ரிக் முறை தொடங்கப்பட்டுள்ளது. எனினும் பயோமெட்ரிக் முறையில் பிரச்னைகள் ஏற்பட்டால் நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேஸ் விலை உயர்ந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட மலை கிராம மக்கள் பயன்பெறும் விதமாக கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யபடும்" என கூறினார்.

இதையும் படிங்க: 'முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவை காப்பாற்றவும்' - ராமதாஸ் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details