நீலகிரி மாவட்டத்தில் சுமார் 520 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து தேயிலை தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் அவர்களது கோரிக்கை, குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், “நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது.
உதகை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மையம் 6 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 800 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை மூலம் 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது.