தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டியதில் மூவர் காயம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேனீக்கள் கொட்டியதில் கோவையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மூன்று பேர் காயமடைந்ததால் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேனீக்கள் கொட்டியதில் மூன்று பேர் காயம்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேனீக்கள் கொட்டியதில் மூன்று பேர் காயம்

By

Published : Apr 12, 2023, 7:51 PM IST

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேனீக்கள் கொட்டியதில் மூன்று பேர் காயம்

நீலகிரி:குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 10க்கும் மேற்பட்ட தேன் கூடுகள் உள்ளன. இன்று மதியம் படகு இல்லப் பகுதியிலிருந்த தேன் கூடுகளில் ஒன்று கலைந்து சுற்றுலாப் பயணிகளைத் தாக்கத் துவங்கியது. இதனைத் தொடர்ந்து பூங்காவினுள் சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிக தடையும் விதிக்கப்பட்டது. தேனீக்கள் தாக்கியதில் கோவையைச் சேர்ந்த 3 சுற்றுலாப் பயணிகள் காயம் அடைந்தனர்.

பின் உடனடியாக, காயம் அடைந்த லிங்கேஷ், சொக்க லிங்கம், காவிய ராணி ஆகிய மூன்று பேரும் குன்னூர், லாலி மருத்துவமனையில் வெளி நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். பின் சிகிச்சை பெற்று தீவிர பாதிப்புகள் ஏதும் இன்றி திரும்பினர். இந்த சம்பவத்தால் பூங்காவினுள் சுற்றுலாப் பயணிகள் மூன்று மணி நேரம் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. பூங்காவில் பராமரிப்பு வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதையும் படிங்க:சினிமா பிரபலங்களை மிஞ்சிய பொம்மன் - பெள்ளி: செல்பி எடுக்க சுற்றுலா பயணிகள் போட்டாபோட்டி!

சுற்றுலாத் தளத்தில் எதிர்பாராத விதமாகச் சுற்றுலாப் பயணிகள் காயமடையும் அளவிற்குத் தேனீக்கள் கொட்டியது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிம்ஸ் பூங்காவினுள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்து உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தாதவாறு தேனீக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

இதையும் படிங்க:ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி பள்ளத்தில் விழுந்த கார்; 5 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details