தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று தலைமுறைகளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் - ஜோதிகொம்பை கிராம மக்கள்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அமைந்துள்ள ஜோதிகொம்பை என்னும் கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக மின்சாரம் மற்றும் வாக்காளர் அட்டை இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

the nilgiris

By

Published : Mar 15, 2019, 1:43 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதுஜோதிகொம்பை என்னும் ஆதிவாசி கிராமம். இந்த கிராமம் உலிக்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியாகும். சுற்றிலும் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் குறும்பர் இனத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இங்கு அமைந்துள்ளன.

இந்த கிராமம் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே இருந்து வருகிறது. கடந்த மூன்று தலைமுறையாக மின்சாரம் இல்லாமல் இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் தமிழக அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், அரசு சார்பாக வழங்கப்படும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இன்று வரை கிடைக்காததால் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையோடு கூறுகின்றனர்.

மேலும் அரசு மற்றும் தேர்தல் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோதிகொம்பை ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details