தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹேய் வண்டிய நிறுத்துப்பா..! மலை ரயிலை வழிமறித்த யானைகள்.. ரிவர்ஸில் ஓட்டிய ஓட்டுநர் வீடியோ! - வனத்துறையினர்

ரண்ணிமேடு அருகே ஊட்டி மலை ரயிலை வழி மறித்த மூன்று காட்டு யானைகளிடமிருந்து தப்ப பின்பக்கமாக இஞ்ஜின் ஓட்டுநர் ரயிலை பின்னோக்கி செலுத்தினார். இதனால் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக ரயில் சென்றது.

ரயிலை வழிமறித்த 3 காட்டுயானைகள்
ரயிலை வழிமறித்த 3 காட்டுயானைகள்

By

Published : Mar 10, 2023, 2:09 PM IST

ரண்ணிமேடு அருகே மலை ரயிலை வழி மறித்த மூன்று காட்டு யானைகள்

நீலகிரி:குன்னூர் பகுதியில் உள்ள சமவெளிப் பகுதிகளில் குறிப்பாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி உள்ளதால் காட்டு யானைகள் அடிக்கடி குன்னூர் மலைப்பாதையில் வலம் வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காட்டேரி பூங்கா பகுதிக்கு புதியதாக மூன்று பெண் காட்டுயானைகள் வந்ததை குன்னூர் வனத்துறையினர் அறிந்தனர்.

அதன் பின்னர் அந்த யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்பொழுது ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டிருந்த அந்த மூன்று காட்டு யானைகளும் வனத்துறையினரைத் திரும்பி விரட்ட துவங்கியுள்ளது. அந்த சமயத்தில் நீலகிரி மலை ரயில் காலை 7:10 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் 10:30 வந்தடையும். அந்த நேரத்தில் மலை ரயில் குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

ரண்ணிமேடு ரயில் நிலையம் பகுதிக்குள் ரயில் வந்த போது வழி மறித்த மூன்று காட்டு யானைகள் மலை ரயிலை குன்னூர் பகுதிக்கு விடாமல் தடுத்தது. இதனால் ரயில் இன்ஜின் டிரைவர் ரயிலைப் பின்னோக்கி செலுத்தினார். இதற்கிடையில் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் யானைகளைச் சத்தமிட்டு காட்டுக்குள் விரட்டினர்.

பின்பு மலை ரயில் ரண்ணிமேடு ரயில் நிலையம் வந்தடைந்தது. யானைகள் ரயிலை வழி மறித்ததால் மலை ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமானது. அதன் பின்பு ரண்ணிமேடு ரயில் நிலையத்திலிருந்து குன்னூர் நோக்கி மலை ரயில் சென்றது. ரயிலில் சென்ற பயணிகள் காட்டு யானைகளைக் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: தருமபுரியில் தாயை இழந்து தவிக்கும் யானை குட்டிகள்.. வனத்துறை எடுத்துள்ள புதிய முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details