நீலகிரி:உதகையில் தற்போது இரண்டாவது சீசன் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் தசரா பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் தமிழ்நாட்டில் இருந்தும்; கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டைமாநிலங்களில் இருந்தும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், உதகை அரசுத் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், தொட்டபெட்டா காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச்செல்லும் பிரதான சாலைகளில் கடும் வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உதகையில் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் காரணமாக, சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றன. இதனைக்கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
காலாண்டு விடுமுறையினையொட்டி உதகையில் குவியும் சுற்றுலாப்பயணிகள்... ஏற்பட்டது போக்குவரத்து நெரிசல் மேலும் கடும்வாகன நெரிசல் காரணமாக சுற்றுலாப்பயணிகள் திட்டமிட்டபடி சுற்றுலா தலங்களைக்கண்டு ரசிக்க முடியாமலும், நகரில் போதிய வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாததாலும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க: கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் - தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதிய மத்திய சுற்றுச்சூழல் துறை