தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பை கிடங்கை காலி செய்யவில்லை - நீதிமன்றத்தை நாட மக்கள் முடிவு

நீலகிரி: தீட்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கை காலி செய்து இடத்தை வனத்துறையிடம் ஒப்படைக்குமாறு பசுமை தீர்ப்பாயம் உதகை நகராட்சிக்கு உத்தரவிட்டும் தொடர்ந்து நகராட்சி அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தீட்டுக்கல் குப்பைகிடங்கு

By

Published : Jun 19, 2019, 12:38 PM IST

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு 15 டன் அளவிலான குப்பை கழிவுகள் உதகை நகராட்சி மூலம் சேகரிக்கபட்டு தீட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சேமிக்கப்பட்டுவருகிறது. 1972ஆம் ஆண்டு முதல் உதகை நகராட்சி வனத்துறைக்குச் சொந்தமான இந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து குப்பைகள் கொட்டி வரும் நிலையில் குப்பை கிடங்கிலிருந்து வரும் துர்நாற்றம், கழிவு நீர் போன்றவைகளால் தீட்டுக்கல் பகுதி மக்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுகிறது.

இதனையடுத்து தீட்டுக்கல் பகுதி மக்கள் குப்பை கிடங்கை மூட கோரியும் 2012ஆம் ஆண்டுடன் முடியும் குத்தகையை புதுப்பிக்க அனுமதியளிக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி 2011ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் தீட்டுக்கல் பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சில கட்டுபாடுகளுடன் குப்பை கிடங்கை பயன்படுத்துமாறு உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தி வந்தது.

தீட்டுக்கல் குப்பைகிடங்கு

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு மீண்டும் தீட்டுக்கல் பகுதி மக்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தீட்டுக்கல் பகுதியில் இயங்கும் குப்பை கிடங்கை காலி செய்து, அந்த இடத்தை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்குமாறு பசுமை தீர்ப்பாயம் 2018ல் உத்தரவிட்டிருந்தது.

தீர்ப்பாயம் உத்தரவிட்டு பல மாதங்களை கடந்தும், குப்பை கிடங்கை காலிசெய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக குப்பை கிடங்கை காலி செய்யவில்லை என்றால், மீண்டும் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details