தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேசன் கடையை அகற்றி இடத்தை தனியாருக்கு தாரை வார்த்த நெடுஞ்சாலை துறை...! - The Nilgiris district News

நீலகிரி: குன்னூர் காட்டேரி பகுதியில் ஐந்து கிராம மக்கள்  பயன்படுத்தி வந்த ரேசன்கடை மற்றும் பேருந்து நிறுத்ததை ஆக்கிரமிப்பு கட்டடம் எனக் கூறி நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் அகற்றி தனியாருக்கு தாரை வார்த்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ரேசன் கடை

By

Published : Nov 20, 2019, 4:46 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையோரம் ரேசன்கடை மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியவை இருந்தன. இந்த கட்டடங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக கூறி நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றினர்.

இந்நிலையில் தற்போது ரேசன் கடை இடிக்கப்பட்ட இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ஓட்டல் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆக்கிரமிப்பு இடம் என ரேசன்கடை இடிக்கப்பட்ட இடத்தில் ஓட்டல் கட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசு அலுவலர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. உடனடியாக பணிகளை நிறுத்தி விட்டு மீண்டும் அதே இடத்தில் ரேசன் கடை கட்டிக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

ரேசன் கடை அகற்றிவிட்டு நடைபெறும் ஓட்டல் கட்டுமான பணி

இதையும் படிங்க:'இயற்கையை பூஜியுங்கள்' - நடிகர் விவேக்

ABOUT THE AUTHOR

...view details