தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை எதிரொலி: மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் நீலகிரிக்கு வருகை

நீலகிரி: கனமழை பெய்து வரும் நிலையில், மீட்பு பணிக்காக பாதுகாப்புப் படை மற்றும் மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 9, 2019, 4:15 AM IST

இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு, சாலைகள் துண்டிப்பு, வெள்ளம் என அதிக பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா கூறுகையில், பாதிப்புகளை பார்வையிட இன்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நீலகிரிக்கு வருவதாக தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாகளில் அதிகமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கபட்ட 2ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். மேலும் மழை ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த மூன்று குழுவினரும், மத்திய பேரிடர் மீட்பு படையை சார்ந்த மூன்று குழுவினரும் நாளை காலை வருவகின்றனர். அவர்களுடன் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details