நீலகிரி தொகுதியில் மக்களவைத்தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கி வருவதையொட்டி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், உதகை அருகே உள்ள அருவங்காடு பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா, "நீலகிரி மக்களவைத்தேர்தலில் வெற்றி பெற்ற போதும், தோல்வி அடைந்த போதும் நீலகிரி மாவட்ட மக்களின் தோழனாக இருந்திருக்கிறேன். நீலகிரியில் இருக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் புகைப்படத் தொழிற்சாலையை நான் மத்திய அமைச்சராக இருந்த போது மூடாமல் தடுத்து நிறுத்தினேன்.