நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர் உள்ளிட்ட 6 வகையானை பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் தோடர் இன மக்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். கல்வியில் பின் தங்கிய நிலையில் இருந்த தோடர் இன மக்கள் தற்போது அவர்களது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
சமீப காலமாக தோடர் இன மக்களின் குழந்தைகள் பல்வேறு துறைகளில் பணிபுரியத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், உதகை அருகே சாண்டி நல்லா தவிட்டு கோடு மந்து பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரது மகள் நந்தினி, சென்னை சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப்படிப்பான பி.ஏ.பி.எல் படித்து தேர்ச்சி பெற்று தோடர் சமுதாயத்தில் முதல் வழக்கறிஞராகி உள்ளார்.