நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மசினகுடி, சிறியூர், ஆனைகட்டி, மாயார் ஆகிய பழங்குடியின கிராமங்களுக்கு வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில்தான் செல்ல வேண்டும். இந்நிலையில் நேற்று கிராம மக்கள் சிலர் வாகனத்தில் சிறியூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் மேய்ந்துகொண்டிருந்த யானைக் கூட்டங்களில் இருந்து ஒரு யானை, வாகனத்தைத் தாக்கும் நோக்கில் பிளிரிக்கொண்டே நீண்ட தூரம் பின்தொடர்ந்து வந்தது.
வாகனத்தைத் தாக்க துரத்திவந்த யானை..! - மசினகுடி அருகே பரபரப்பு - நீலக்கிரி மாவட்டம்
நீலக்கிரி: உதகை அருகே யானை ஒன்று வாகனத்தைத் தாக்க துரத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானை
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து வேகமாக வாகனத்தை இயக்கி தப்பிச் சென்றனர். மலைப்பகுதி கிராமங்களுக்குச் செல்வோர் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.