நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையால் பொதுமக்களின் வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மழையில் அடித்து செல்லப்பட்ட பாலம்! - நீலகிரி
நீலகிரி: கனமழையின் போது தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் மலையை விட்டு மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி
இந்நிலையில், உதகை அருகே உள்ள குன்னப்பூ மந்தி என்ற மலைவாழ் மக்கள் வாழும் கிராமம் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் உதகைக்கு வர பயன்படுத்தும் பிரதான பாலம் ஒன்று கடந்ந 9ஆம் தேதி கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியத நிலை ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்க இயலாமல் தவித்து வருகின்றனர்.