தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் தமிழ் ஊடக செய்தி எதிரொலி - யானைகள் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிப்பு - நீலகிரி வனத்துறை

ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் செய்தியின் எதிரொலியால், குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் யானைகள் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது.

யானைகள் வழித்தடத்தில் இருந்த கட்டடம் இடிப்பு
யானைகள் வழித்தடத்தில் இருந்த கட்டடம் இடிப்பு

By

Published : Feb 4, 2022, 5:37 PM IST

நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் கடந்த இரு தினங்களுக்கு முன் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஹில்கிரோ ரயில் நிலையத்தில் முகாமிட்டிருந்தன.

அவை உணவு, தண்ணீருக்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாமல், அவ்விடத்திலேயே சுற்றித் திரியும் காணொலி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் செய்தியாக வெளியிடப்பட்டது.

இச்செய்தியை, ரயில்வே துறையினர் பார்த்து, யானைகள் குட்டியுடன் தடுப்புச்சுவரை கடக்க முடியாமலும் வனப்பகுதிக்குச் செல்ல முடியாமலும் தவிப்பதை உணர்ந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர், ரயில்வே துறையினர் கூட்டாக முடிவுசெய்து, உடனடியாக யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த புதிய தடுப்புச் சுவரை இடித்தனர்.

யானைகள் வழித்தடத்தில் இருந்த கட்டடம் இடிப்பு

இதனால், யானைகள் குட்டிகளுடன் வனப்பகுதிக்குச் செல்ல ஏதுவாக அமைந்துள்ளது. இதனைக்கண்ட சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் செய்தி வெளியிட்ட ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு நன்றி தெரிவித்ததோடு,

தக்க நடவடிக்கை எடுத்த வனத்துறை, ரயில்வே துறை அலுவலர்களுக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ரயில்வே ஸ்டேஷனில் குடும்பமாக லூட்டி அடிக்கும் யானைகள்

ABOUT THE AUTHOR

...view details