திமுக வேட்பாளர் விவரம்
பெயர் : எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
கட்சி : திமுக
வாக்கு : 4, 54, 534
திமுக வேட்பாளர் விவரம்
பெயர் : எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
கட்சி : திமுக
வாக்கு : 4, 54, 534
தஞ்சாவூர் அருகே உள்ள நாட்டாணி என்ற குக்கிராமத்தில் 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்தார். விவசாயம்தான் பிரதான தொழில். எந்த இடத்திலும் இருந்தாலும், நான் ஒரு விவசாயி என முன்னிலைப்படுத்திக் கொள்வார். திராவிட இயக்கத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக, திமுகவில் இணைந்தார். விவசாய அணி அமைப்பாளர், மாநில மாணவரணி அமைப்பாளர் எனப் பல பொறுப்புகளை வகித்தார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து எட்டு முறை போட்டியிட்டிருக்கிறார். இதில், முதல் மூன்று முறை தோல்விகளையே சந்தித்தார், பின்னர் தொடர்ந்து 5 முறை வெற்றிக்கொடி நாட்டினார். மத்திய நிதித்துறை இணைஅமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர். இவர் பதவி வகித்த காலத்தில்தான் விவசாய கடன், கல்விக் கடன்களை அதிகளவில் வழங்கினார்.