தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்டிக்கு உதவிய தாய் யானை: நெகிழ வைக்கும் வீடியோ காட்சி! - Nilgiris District News

நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாதையை கடக்க முடியாமல் தவித்த குட்டி யானைக்கு தாய் யானை உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குட்டிக்கு உதவிய தாய் யானை
குட்டிக்கு உதவிய தாய் யானை

By

Published : Jul 4, 2020, 2:16 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுபாளையம் சாலை, கூடலூர் – கேரளா – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அதிகளவில் முகாமிட்டுள்ளன.

சாலையில் நெகிழ வைக்கும் காட்சி
இந்நிலையில், கூடலூர் அருகே குட்டி யானை ஒன்று சாலையின் தடுப்பை தாண்ட முடியாமல் தவித்தது. அப்போது மேலே சென்ற தாய் யானையானது மீண்டும் கீழே இறங்கி வந்து குட்டியை தூக்கிவிட்டுவிட்டு மீண்டும் மேலே சென்றது.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது. ஆனால் இச்சம்பவம் பார்ப்பவர்களின் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:குடிநீர் பணிகளுக்காக சீர்குலைக்கப்பட்ட சாலைகள்: பாதிக்கப்படும் வாகன ஓட்டிகள்

ABOUT THE AUTHOR

...view details