நீலகிரி:சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 18 பேர், உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலாவை முடித்துவிட்டு கல்லட்டி அருகே உள்ள தனியார் விடுதியில் தங்குவதற்காக சென்றுள்ளனர்.
15ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்தபோது, அவர்களின் டெம்போ ட்ராவலர் வேன் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அதில் 14 ஆண்கள், 4 பெண்கள் உள்பட 18 பேர் பயணித்த நிலையில், திருநெல்வேலியை சேர்ந்த முத்துமாரி (24) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.