தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டு யானை தாக்கியதில் டீக்கடை உரிமையாளார் உயிரிழப்பு..! - காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

கூடலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த டீக்கடை உரிமையாளார் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சடலத்தை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டு யானை தாக்கியதில் டீக்கடை உரிமையாளார் பலியானர்
காட்டு யானை தாக்கியதில் டீக்கடை உரிமையாளார் பலியானர்

By

Published : May 27, 2022, 8:07 AM IST

Updated : May 27, 2022, 8:54 AM IST

நீலகிரி: கூடலூர் அருகே ஓவேலி ஆருட்பாறை பகவதி அம்மன் கோவில் செல்லும் சாலையில் ஆனந்த் (48) என்பவர் (மே26)நேற்று காலை தனது டீக்கடையை திறப்பதற்காக சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காட்டு யானை ஆனந்தை துரத்தி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்நிலையில், காட்டு யானை தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, அதே இடத்தில் யானை தாக்கி இறந்தவரின் உடலை வைத்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதங்களாக யானை நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

காட்டு யானை தாக்கியதில் டீக்கடை உரிமையாளார் உயிரிழப்பு

இச்சம்பவம் குறித்து அறிந்த கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் று உயிரிழந்த ஆனந்த் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க:குன்னூர் பகுதியில் முகாமிடும் காட்டு யானைகள் - ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் இளைஞர்!

Last Updated : May 27, 2022, 8:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details