நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை தொழில் உள்ளது. இதனை நம்பி பல்லாயிரக்கணக்கான உழவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு உற்பத்திசெய்யப்படும் தேயிலைத் தூள் குன்னூரில் ஏலம்விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
நீலகிரியில் தேயிலைத் தூள் உற்பத்தி 18.5% உயர்வு! - nilagris district news
நீலகிரி: தேயிலைத் தூள் உற்பத்தி கடந்த ஆண்டைவிட 10 லட்சம் கிலோ கூடுதலாக உற்பத்திசெய்யப்பட்டுள்ளது. 18.5 விழுக்காடு உற்பத்தி உயர்ந்துள்ளது.
Tea production has increased in the Nilagris
நீலகிரியில் கடந்த நான்கு மாதங்களாக தேயிலைத் தூள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதில் கடந்த ஆண்டைவிட 10 லட்சம் கிலோ கூடுதலாக உற்பத்திசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உற்பத்தி 18.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.