தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் காட்டு யானையின் அட்டகாசம்: தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!

நீலகிரி: பாண்டியாறு அரசு தேயிலைத் தோட்டம் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்வதைத் தடுக்கக்கோரி தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

nilgiri
நீலகிரி

By

Published : Apr 11, 2021, 9:59 AM IST

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு அரசு தேயிலைத் தோட்டம் குடியிருப்புகளில் வசிக்கும் தர்மலிங்கம் உள்ளிட்ட மூன்று பேரின் வீடுகளை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி, நள்ளிரவில் வந்த இரண்டு காட்டு யானைகள் சேதப்படுத்தின.

இந்த யானைகள், கதவு ஜன்னல்களை உடைத்து உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட பொருள்களை வெளியே இழுத்து வீசி நாசம் செய்துள்ளன. அச்சமயத்தில், வீடுகளிலிருந்தவர்கள் பின் வாசல் வழியாகத் தப்பியோடி, அருகிலிருந்த வீடுகளில் ஒளிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த நாளும், அதே பகுதிக்கு வந்த காட்டு யானைகள், வீடுகளை உடைத்துவிட்டுச் சென்றுள்ளன.

இதனால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி, வேலைக்குச் செல்ல மறுத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தொழிலாளர்களிடம் தோட்ட நிர்வாக அலுவலர்கள், வனத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

யானைகள் மீண்டும் தங்கள் பகுதிக்கு வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்வரை வேலைக்குச் செல்லப் போவதில்லை எனவும் தொழிலாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்

இதையும் படிங்க:கரோனா பரிசோதனையில் குளறுபடி: ஸ்வாப் ஸ்டிக்குகளை உடைக்கும் ஊழியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details