இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாக்குபெட்டா விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால், விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு அகதிகளாக வெளியேறுவது, மீதமுள்ள விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் கொடுமைப்படுத்துவது, வங்கிகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் உதவிகள் சரியாக சென்றடையாததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேயிலை விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்! - undefined
நீலகிரி: கோத்தகிரி அருகே சாமில்திட்டு கிராமத்தில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ. 30 நிர்ணயம் செய்யக்கோரியும், படுகர் சமுதாயத்தை ஆதிவாசி பட்டியலில் சேர்த்திடக் கோரியும், வனவிலங்குகளை தடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேயிலை விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்! மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேயிலை விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6354523-506-6354523-1583777515385.jpg)
மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூபாய் 100 கோடிக்கு மேல் இன்னும் வழங்க நடவடிக்கை எடுக்காத தேயிலை வாரியத்தை கண்டித்தும், கோத்தகிரி, குன்னூர், உதகை, கூடலூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டது. இனிவரும் காலங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும், இதற்கும் மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லையெனில் மாவட்ட வாரியாக மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்குமார் தெரிவித்தார்.