நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக தேயிலை விவசாயம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. தேயிலை தோட்டங்களில் உறைப்பனி கொட்டி தீர்த்ததால் செடிகள் கருகிவருகின்றன. இந்த தேயிலைச் செடிகளின் மேற்பரப்பு உள்ள கொழுந்துகள் கருகினால் சாகுபடி செய்ய முடியாது.
நீலகிரியில் கடும் பனிப்பொழிவால் தேயிலை விவசாயம் பாதிப்பு - Coonoor tea leaves
நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
உறைப்பனி தாக்கத்தால் தேயிலை விவசாயிகள் பாதிப்பு
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில், நீலகிரியில் இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு பனித்தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக தேயிலை விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு நிதிஉதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகப்படியான பனிப்பொழிவு ஏற்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: வரையாடுகளை துன்புறுத்தி போட்டோ; கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு கோவையில் சிறை