தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசத் தடை! - குன்னூர்

நீலகிரி: குன்னூர் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசக் கூடாது எனக் கூறிய பொதுமேலாளரைக் கண்டித்து அனைத்து தொழிலாளர்களும் கொட்டும் மழையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குன்னூர் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை  Aruvankadu Cordite Factory  tamil speaking banned  தமிழில் பேசத் தடை  வெடிமருந்து தொழிற்சாலை  coonoor news
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசத் தடை!

By

Published : Jul 17, 2020, 12:36 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் கரோனா வைரஸ் தொற்று காலத்தில், தங்களது பாதுகாப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை ஆலை நிர்வாகத்திடம் வைத்துள்ளனர்.

இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட மூன்று தொழிற்சங்கங்களை ஆலை நிர்வாகம் அழைத்துள்ளது. அப்போது, ஆலையின் பொதுமேலாளர், தொழிலாளர்களை ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசுமாறும், தமிழில் பேசினால் நான் எழுந்து வெளியேபோய் விடுவேன் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைத் தொழிலாளர்கள் போராட்டம்

இதைக்கண்டித்த தொழிலாளர்கள், இதற்கு பொதுமேலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாதுகாப்பு குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிலாளர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெடி மருந்து தொழிற்சாலை முதன்மை மேலாளர் மன்னிப்பு கேட்கும் வரை அனைத்து தொழிற்சங்கங்கள், குன்னூரில் உள்ள மற்ற அமைப்புகள், அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம் என்று தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல தடை!

ABOUT THE AUTHOR

...view details