உதகையில், மலர் கண்காட்சி நிறைவடைந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தாவரவியல் பூங்காவில் இன்று முதல் கோடை விழா தொடக்கம் - ooty botanical garden
நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கோடை விழா நடைபெறுகிறது.
ooty
இந்த நிலையில், அரசு தாவரவியில் பூங்காவில் இன்று முதல் கோடை விழா, கலை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவை நீலகிர மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குத்துவிலக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பரதநாட்டியம், கர்நாடகாவின் டொல்லுகுனிதா, கேரளாவின் திருவாதுரை நடனம், தெலங்கானாவின் பாரம்பரிய நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.