தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ராட்சத மரம் விழுந்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

By

Published : Apr 24, 2019, 3:38 PM IST

பலத்த காற்றில் சாய்ந்த ராட்சத மரம்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த உப்பட்டி, பந்தலூர், மேங்கொரஞ்ஜி போன்ற பகுதிகளில் இன்று கன மழையுடன் பலத்த காற்று வீசியது.

இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பெய்த இந்த மழையால், தமிழ்நாடு-கேரளா தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்தது. தொடர்ந்து காற்று வீசிக்கொண்டிருந்தால் சாலையில் விழுந்த ராட்சத மரத்தை அகற்றும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.

காற்றின் வேகம் குறைந்ததையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் ராட்சத மரத்தை அகற்றும் பணி நடைபெற்றது. இதனால், அங்கு சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த காற்றில் சாய்ந்த ராட்சத மரம்

ABOUT THE AUTHOR

...view details