நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உதகமண்டலத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது, மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள், வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 15,651 பேர் கரோனாவால் பாதிக்கபட்டுள்ளதாகவும், அதில் 81 விழுக்காடு, அதாவது 12,662 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக கூறினார்.
'தடுப்பூசி குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை' - வனத்துறை அமைச்சர் தகவல்! - forest minister ramachandran
நீலகிரி: கரோனா தொற்று, தடுப்பூசி குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்பூசி குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
இதனையடுத்து, கரோனா தொற்று, கரோனா தடுப்பூசி குறித்து தவறான வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:வீரப்பனிடம் குண்டு அடிபட்ட காவலர் கர்நாடகாவில் மரணம்!