நீலகிரி:வனப்பகுதியை கொண்டுள்ள இம்மாவட்டத்தில் சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் உள்ளன. அவ்வப்போது அவைகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதியின் அருகே உள்ள தோட்டத்தில் உலா வருவதுண்டு. இதனால் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், தேயிலைத் தோட்டங்களில் வலை கம்பிகள் அமைத்தும், நாட்டு வெடிகளை பயன்படுத்தியும் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் வனத்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குன்னூர் அருகே நாட்டு வெடியை கடித்து நாய் உயிரிழப்பு! - நாட்டு வெடியை கடித்து நாட்டு நாய் உயிரிழப்பு
குன்னூர் அருகே காட்டு பன்றிக்கு வைத்திருந்த நாட்டு வெடியை, கடித்து நாய் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள ஸ்டான்லி பார்க் பகுதியில் வனப்பகுதி ஓட்டிய சாலையின் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடியை வைத்துள்ளனர். அந்த வெடியை அப்பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது வளர்ப்பு நாய் கடித்ததில் வாய் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது, இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:போக்சோவில் சிக்கிய தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் திடீர் தற்கொலை முயற்சி