தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதகையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

உதகை உதயமாகி 200 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் ஜான் சல்லிவன் வெண்கல சிலையை உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உதகை உதயமாகி 200 வது ஆண்டை கொண்டாடும் வகையில் ஜான் சலீவனின் வெண்கல சிலை திறப்பு
உதகை உதயமாகி 200 வது ஆண்டை கொண்டாடும் வகையில் ஜான் சலீவனின் வெண்கல சிலை திறப்பு

By

Published : May 22, 2022, 7:09 AM IST

நீலகிரி: கடந்த 1815 ஆம் ஆண்டு முதல் 1830 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஜான் சல்லிவன். இவர் 1819 ஆம் ஆண்டு கோத்தகிரி வந்து அங்கு முதல் கட்டடத்தை கட்டினார். பின்னர் அவர் கோத்தகிரியில் இருந்து 1822 ஆம் ஆண்டு உதகையை கண்டறிந்து அங்கு வந்தடைந்தார்.

இந்நிலையில் உதகையை உலகிற்கு அறிமுகப்படுத்தியதன் 200ஆவது ஆண்டு அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் உதகையில் மேற்கொள்ளப்படுகிறது.

ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

முதற்கட்டமாக உதகையை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஜான் சல்லிவன் மார்பளவு வெண்கல சிலையை 20 லட்சம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதகை தாவரவியல் பூங்கா சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க:‘பேரறிவாளன் விடுதலை - வரவேற்பும், வருத்தமும்....

ABOUT THE AUTHOR

...view details