நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீலகிரி மாவட்ட மறுசீரமைப்புக்காக ரூ.199 கோடி ஒதுக்கப்பட்டது.
‘நீலகிரிக்கு 1000 கோடி ரூபாய் வழங்குக!’ - அரசுக்கு திமுக கோரிக்கை! - வெள்ளப்பெருக்கு
சென்னை: நீலகிரி மாவட்ட வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு திமுக கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தலைமை செயலருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நீலகிரி மாவட்ட மறுசீரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.199 கோடி போதுமானதல்ல. மறுசீரமைப்புக்கு ரூ.1000 கோடி நிதி அளிக்கப்பட வேண்டும். அந்த நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வல்லுநர் குழு அமைத்து சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கடிதத்தை திமுக எம்எல்ஏக்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் ஆகியோர் முதலமைச்சரின் செயலரிடமும், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோரிடமும் நேரில் வழங்கினர்.