நீலகிரி மாவட்டம் திமுக சார்பில், குன்னூர் தனியார் ஓட்டலில் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். இதில், நீலகிரி மாவட்ட திமுக சார்பாக தொகுதி எம்பி ராசா, மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திமுக சார்பில் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொற்கிழி மற்றும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில், காணொலி காட்சி மூலம் உரையாற்றிய ஸ்டாலின், "கொடநாட்டில் 11 பேர் கொண்ட கும்பல் காவலாளி ஓம்பகதூரை கட்டி போட்டு, அரசு ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றது. ஓம்பகதூரும் மூச்சுத்திணறி இறந்தார். ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தபிறகு மர்மமான முறையில் இறந்தார்.
கேரளாவை சேர்ந்த சயான் மனைவி மற்றும் குழந்தை இறந்தனர். தலைமறைவாகிவிட்ட கிருஷ்ண பகதூரை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது இந்த பங்களாவில் இருந்துள்ளார். அரசு கோப்புக்கள் திருடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.