தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதகையில் பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா - Special tour program

நீலகிரி: உதகையில் அரசு பழங்குடியினர் பள்ளி மாணவர்களிடம்  சுற்றுலா தலங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஒரு நாள் சுற்றுலாப் பயணத்தில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tour program, பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா
Tour program, பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா

By

Published : Jan 23, 2020, 12:33 PM IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள், அவற்றின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. உதகையில் நடைபெற்ற இந்த சுற்றுலா நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பழங்குடியின மாணவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யாவுடன் இணைந்து சுற்றுலாத் தலங்களை தூய்மையாக வைப்பது, பாதுகாப்பது குறித்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

உதகையில் பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா

அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு சுற்றுலாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற ஆதிவாசி மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கபட்டன. பின்னர் அரசு பழங்குடியினர் பள்ளி மாணவர்கள் அனைவரும் தாவரவியல் பூங்கா, ஆளுநர் மாளிகை, பழமை வாய்ந்த கட்டடங்கள், ரேடியோ அஸ்ட்ரானமி ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க அழைத்துச் செல்லபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details