தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலை முன்னிட்டு தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை உணர்த்தும் தவக்கால பரிகார பவனி உதகையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது விரைவில் கரோனா நோய் தொற்று இந்த உலகைவிட்டு நீங்வும், சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நல்ல முறையில் நடக்கவும் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

By

Published : Mar 22, 2021, 7:35 AM IST

இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை தவக்காலமாக் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கிறிஸ்த்தவர்கள் அனுசரித்து ஈஸ்டர் என்னும் இயேசுவின் உயிர்ப்பு விழாவைக் கொண்டாடுவது வழக்கம். இவை சுமார் 40 நாள்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கும் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்தும், மாமிசம் உண்ணாமலும் கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை அறிக்கையிட்டு அனுசரிப்பார்கள்.

இதன் ஒரு பகுதியாக நேற்று (மார்ச்.21) உதகையில் தவக்கால பரிகார பவனியானது நடைபெற்றது. இந்த பவனி தூய தெரேசம்மாள் ஆலயத்தில் இருந்து தொடங்கி பிங்கர் போஸ்ட் சாலை, காந்தள் சாலை என முக்கிய வீதிகள் வழியாக குருசடி திருத்தலம் வரை நடைபெற்றது. இதில் மக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, சுமார் மூன்று கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள், கைகளில் சிலுவைகளை ஏந்திக்கொண்டு சிலுவை பாடுகளை அறிக்கையிட்டு ஊர்வலமாக சென்றனர். குருசடி திருத்தலத்தில் இயேசுவின் சிலுவை பாடுகள் தத்ரூபமக நடித்து காட்டப்பட்டது. பின்னர், கரோனா நோய்த்தொற்று இந்த உலகை விட்டு நீங்கவும், எதிர்வரும் சட்டத்பேரவைத் தேர்தல் அமைதியாக நல்ல மறையில் நடக்கவும், உலக மக்களின் வாழ்வதாரம் மேம்படவும், கத்தோலிக்க ஆயர் அமல்ராஜ் தலைமலையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைப்பெற்றது.

மேலும், தேரேசம்மாள் பங்கு தந்தை லியோன், குருசடி பங்கு தந்தை அமிர்தராஜ் உள்ளிட்ட பங்கு தந்தைகள் இதில் கலந்துகொண்டனர். இந்த தவக்கால பரிகார பவனியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பலர் பங்குகொண்டனர்.

இதையும் படிங்க: மத்திய அரசுடன் இணக்கம் ஏன்? - முதலமைச்சர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details