தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் ஸ்பெயின் பிளம்ஸ் பழ சீசன் தொடக்கம்! - நீலகிரி மாவட்ட செய்திகள்

குன்னுார் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஸ்பெயின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட் பிளம்ஸ் பழ சீசன் தொடங்கியுள்ளது.

Spain Plums Season
Spain Plums Season

By

Published : Dec 26, 2020, 10:53 PM IST

நீலகிரி:குன்னுார் அதன் சுற்றுப்புற பகுதிகளில், பேரி, பிளம்ஸ், சீதா, மங்குஸ்தான், ஸ்ட்ராபெர்ரி, துரியன் உள்பட பல்வேறு மருத்துவக் குணம் வாய்ந்த பழங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.

பொதுவாக நீலகிரியில் ரூபி பிளம்ஸ் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றது. சுமார் ஐந்து கிராம் இருக்கும் இந்தப் பழங்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் சீசன் காலமாக உள்ளது.

தற்போது பிளம்ஸ் சீசன் இல்லாத நிலையில், ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளம்ஸ்கள் குன்னுார், பர்லியார் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

‘‘ஸ்பெயின் நாட்டின் இந்த வகை பிளம்ஸ் பழமானது சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிக இனிப்புச் சுவை கொண்ட இந்தப் பழங்கள் தற்போது கிலோ ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.’’ இந்த வகை பிளம்ஸ் நாற்றுக்களை நீலகிரியில் வளர்க்க தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டுமென விவசாயிகள், வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 500 புறநகர் ரயில்கள் இயக்கப்படும் - தென்னக ரயில்வே

ABOUT THE AUTHOR

...view details