தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறு தேயிலை விவசாயிகளுக்கு புதிய மொபைல் செயலி அறிமுகம்! - தென்னிந்திய தேயிலை விவசாயிகளின் மொபைல் ஆப்

நீலகிரி: தென்னிந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 56 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 'சாய் ஸஹ்யோக்' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

new mobile app for tea farmers

By

Published : Oct 10, 2019, 12:18 PM IST

நாட்டின் மொத்தத் தேயிலை உற்பத்தியில், சிறு தேயிலை விவசாயிகளின் பங்களிப்பு 45 விழுக்காடாக உள்ளது. விவசாயிகளின் மேம்பாடு, தரக் கட்டுப்பாடு, நல்ல விலை பெறுதல் உள்ளிட்ட தகவல்களை தென்னிந்திய தேயிலை வாரியம் தேயிலை விவசாயிகளுக்கு அளித்துவருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக சிறு, குறு விவசாயிகளுக்கு சேவைகள் எளிதாகச் சென்று சேர, 'சாய் ஸஹ்யோக்' என்ற புதிய செல்ஃபோன் செயலி (Mobile App) ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலில் வாரியச் செய்திகள், மாதாந்திர அறிக்கை, பசுந்தேயிலை விலை நிர்ணயம், தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் துாளின் விலை, காலநிலை விவரங்கள், பயிற்சி ஆய்வுகள் ஆகியவை குறித்து அறிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை விவசாயிகளுக்கான மொபைல் ஆப்

இது குறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் கூறுகையில், ”தென்னிந்தியாவில் பதிவு செய்த 56 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் 'சாய் ஸஹ்யோக்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேயிலைத் தொழிற்சாலைகள், விவசாய சங்கங்கள் ஆகியவை செயலியின் மூலம் இணைக்கப்படும். இதற்கான முகாம்களில், விவசாயிகளின் செல்ஃபோன்களில் செயலியை பதிவிறக்கம் செய்து, QR Code உருவாக்கித் தரப்படும். வாரிய ஸ்மார்ட் கார்டு மூலம் புதுப்பித்தல் கட்டணம் 24 ரூபாய் செலுத்தியும் இந்தச் செயலி மூலம் பயன்பெறலாம்” என்றார்.

இதையும் படிங்க: அஸ்ஸாமில் விளையும் தேயிலைக்கு இம்புட்டு விலையா..?

ABOUT THE AUTHOR

...view details