நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. இந்திய தேயிலை வாரியம் சிறு தேயிலை விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக சிறு தேயிலை விவசாயிகளுக்கு விரைவுத் தகவல் குறியீடு உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள வசதியாக 'சாய் சஹ்யோக்'என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தேயிலை குறித்து அனைத்து தகவல்களையும் இந்த செயலி மூலமாக எளிதில் பெற்று பயனடைய சிறு தேயிலை விவசாயிகள் மொபைலில், சாய் சஹ்யோக் செயலியை பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சி குன்னூரில் தொடங்கியது.