தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மீண்டும் மண் சரிவு - Soil slopes back on the mountain railroad

உதகை: குன்னூர், மேட்டுப்பாளையம் மலை ரயில் வரும் 29ஆம் தேதி இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் பெய்த மழையால் ரயில் பாதைகள் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

குன்னூர், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு
குன்னூர், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு

By

Published : Nov 27, 2019, 10:35 PM IST


நீலகிரியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெய்த கனமழையால் குன்னூர், மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒரு மாத காலமாக குன்னூர், மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, ரயில் தண்டவாளங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவை சீரமைக்கும் பணியில் ரயிவே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து மீண்டும் பெய்த கனமழையால் ரயில் பாதைகள் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

குன்னூர், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு

இந்நிலையில் வரும் 29ஆம் தேதி முதல் மலை ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், பணிகள் நிறைவடையாததால் மலை ரயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details